கோவையில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நகைச்சுவை நடிகர் விவேக் தொடங்கி வைத்தார்.
கோவை புதூரில் உள்ள கல்லூரியில் மரம் நடும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் விவேக் மரக்கன்றை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
அப்போது சுற்றுசூழலை பாதுகாப்பது தொடர்பாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவேக், மரம் நடுவதற்கான அவசியத்தை தமிழக மக்கள் உணர்ந்து விட்டதாக தெரிவித்தார்.