இன்று தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த தேர்வை 10 லட்சத்து, ஆயிரத்து 140 பேர் எழுதி உள்ளனர்.
தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறார். தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதுதவிர மாணவர்கள் படித்த பள்ளிகளுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்ப படும் என்றும்,இன்றே மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்வு முடிவுகளை WWW.dge.tn.nic.in WWW.dge.tn.gov.inஆகிய இணையதளங்களிலும் பார்க்கலாம் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கல்வி வழிகாட்டிக்காகவும், உளவியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் 104 என்ற எண்ணை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…