பதவிக்காக கருணாநிதியை மிரட்டினார்கள் …!திட்டமிட்ட சதி …!மு.க.அழகிரி குமுறல்
கருணாநிதிக்கு என்னை நீக்க வேண்டும் என்கிற எண்ணமே கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கருணாநிதி சமாதியை நோக்கி அமைதி பேரணி நடத்தினர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைதி பேரணி ஒரு வழியாக முடிந்தது.ஆனால் முக.அழகிரி முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடாதது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.பெரிய எதிர்பார்ப்புடன் நடந்த பேரணியின் முடிவில் பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதாவது அழகிரி தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இல்லையென்றால் திமுக குறித்தும் ,முக ஸ்டாலின் குறித்தும் பேசுவார் என்று எதிர்ப்பாசர்க்கப்பட்டது.ஆனால் முக.அழகிரி எதையுமே பேசாதது ஒரு பரபரப்பாக இருந்தது .இந்நிலையில் மீண்டும் மு.க.அழகிரி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
நான் திமுகவின் வளர்ச்சிக்காக அதிகமாக பாடுபட்டேன்.ஒரு சில குறைகளை கூறினேன். சில ஆதாரங்களை எடுத்துக்கொண்டு கூறினேன் .இதனாலையே அப்போதைய திமுக தலைவர் கருணாநிதிக்கு என்னை நீக்க வேண்டும் என்கிற எண்ணமே கிடையாது.அதேபோல் பொதுச்செயலாளருக்கும் கிடையாது. நான் எங்கே கட்சியில் வளர்ந்து விடுவேனோ என நினைத்து சிலர் சதி செய்து, கருணாநிதியை மிரட்டி என்ன கட்சியிலிருந்து நீக்க செய்து விட்டனர்.
2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது கருணாநிதியை சந்தித்து என்னை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டேன். கொஞ்ச நாட்கள் அமைதியாக இருக்குமாறு கூறினார்.மேலும் பின்னர் சேர்த்துக் கொள்கிறேன் என்று கூறினார் . அதன் பின் அவரின் உடல்நிலை சரியில்லாமல் போனது.கருணாநிதி பேச முடியாத சூழ்நிலையில் எதற்கு தொல்லை கொடுக்க வேண்டும் என பொறுமையாக காத்திருந்தேன். ஆனால், கடைசி வரை எனது எண்ணம் நடக்கவில்லை. என் வளர்ச்சியை கண்டு பயந்து சிலர் அதை செய்து விட்டனர்” என்று மு.க.அழகிரி கூறினார்.