” பணிகளை கண்காணிக்க விடுங்கள் ” சென்னையில் ஆய்வாளர்கள் போராட்டம்..!!
சென்னை:
சாலை ஆய்வாளர்களின் பணிகளை தடுக்கும் வகையில் விருது நகர் கோட்டப் பொறியாளர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். இதனைக் கண்டித்து வியாழனன்று (செப்.6) சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் அலுவலகம் முன்பு நெடுஞ் சாலைத்துறை ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாநில, மாவட்ட முக்கிய சாலைகளில் நடைபெறும் கேபிள் புதைத்தல், குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் நிறு வனம், சீரமைப்பு கட்டணமாக அர சுக்கு பல லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.
இதுபோன்ற பணிகளை சாலை ஆய்வாளர்கள் கண்காணித்து வருன்றனர்.கடந்த சில ஆண்டுகளாக கோட்ட வாரியாக உள்ள மாநில, மாவட்ட முக்கிய சாலைகளில், சாலை அமை த்தல், பராமரித்தல் ஆகிய பணிகள் தனியாரிடம் கொடுக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு கோட்டத்திற்கும் 600 கோடி ரூபாய் வரை அரசு செலவிடுகிறது. இதன்படி விருதுநகர் கோட்டச் சாலைப்பணிகள் எஸ்பிகே நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள் ளது. இந்தச்சாலைகளை கண்
காணிக்கும் பொறுப்புகளில் இருந்து சாலை ஆய்வாளர்களை வாய்மொழி உத்தரவின் மூலம் கோட்டப் பொறியாளர் விடுவித்துள்ளார்.
இதனைக் கண்டித்து சென்னை யில் வியாழனன்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் மு.மாரிமுத்து, “சாலைப் பணிகள் மேற்கொள்ளத்தான் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. சாலை அரசுக்கு சொந்தமானது. அந்தச்சாலையில் நடைபெறும் அனைத்துப் பணி களையும் விதிப்படி சாலை ஆய்வாளர் கண்காணிக்க வேண்டும். ஆனால் உள்நோக்கத்தோடு வாய்மொழி உத்தரவின் மூலம் சாலை ஆய் வாளர்கள் விடுவிக்கப்படுவதை இயக் குநர் தடுக்க வேண்டும்” என்றார்.
DINASUVADU