பட்டத்துக்கான மாஞ்சா நூல் சென்னை ராயப்பேட்டையில் தயாரித்த இருவர் கைது!
6 பண்டல் மாஞ்சா நூலையும் சென்னை ராயப்பேட்டையில் மாஞ்சா நூல் தயாரித்த இருவரைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த பறிமுதல் செய்தனர். சென்னை ராயப்பேட்டை ஜவகர் உசேன் தெருவைச் சேர்ந்த ஷா ரூக், யானைக்குளத்தைச் சேர்ந்த இம்தியாஸ் ஆகிய இருவரும் பட்டத்துக்கான மாஞ்சா நூல் தயாரிப்பதாக மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் சரவணனுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்துச் சிறப்புப் பிரிவினர் இருவரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். அப்போது கண்ணாடித் தூள் பசை தடவப்பட்ட 6 பண்டல் மாஞ்சா நூல், பட்டங்கள், மாஞ்சா நூல் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இருப்பதைக் கண்டு அவற்றைப் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் காவல்நிலையத்துக்குக் கொண்டுசென்று விசாரித்து வருகின்றனர். ஆபத்தான மாஞ்சா நூல் தயாரிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் எனக் காவல்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.