சென்னைப் பல்கலைக்கழகத்தில் 117 பேர் படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் 117 பேர் முறைகேடாக ஆன்லைன் முறையில் தேர்வெழுதி பட்டம் பெற முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி தேர்வில் 1980 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ளவர்கள் ஆன்லைன் தேர்வெழுத கடந்த 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி இவர்கள் மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும்,தொலைதூர கல்வி பயிற்சி மையங்கள் தலா ரூ.3 லட்சம் வரை பெற்றுக்கொண்டு இந்த மோசடிக்கு உதவியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனையடுத்து,எந்த பட்டப்படிப்பிலும் சேராமலேயே ஆன்லைன் முறையில் தேர்வெழுதிய 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.மேலும்,வேறு யாரேனும் இதுபோன்ற மோசடி செயலில் ஈடுப்பட்டுள்ளர்களா? என்று கண்டுபிடிக்க விசாரணை குழுவை அமைத்து சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர் கெளரி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
சென்னை : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று…
சென்னை : பனையூரில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நேற்று மாலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று…