காதலியை கிண்டல் செய்த நண்பரை, சென்னை கோயம்பேட்டில் கொலை செய்துவிட்டு, விபத்து போல் ஜோடித்த நண்பரை போலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பேடு மேட்டுக்குளம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் அதே பகுதியில் கார் ஷெட் ஒன்றில் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். கணேஷின் 17 வயது நண்பர் காதலித்து வந்த பெண்ணை கணேஷ் அடிக்கடி விளையாட்டாக கிண்டல் செய்துவதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 17 வயது சிறுவன் வீட்டிலிருந்து கணேஷை அழைத்துச் சென்று மது கொடுத்துள்ளார்.
பின்னர் அவரது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்துகொண்டு கோயம்பேடு அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்லும்போது, பின்னால் அமர்ந்திருந்த 17 வயது சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கணேஷை இடுப்பில் குத்தியுள்ளார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த கணேஷின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு, இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதியது போன்று ஜோடித்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மறுநாள் காலை தகவலறிந்து வந்த போலீசார் கணேஷ் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்ததாக எண்ணி உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையின்போது கத்தியால் குத்தப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்காக மாற்றிய கோயம்பேடு போலீசார், 17 வயது சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கீழ்ப்பாக்கம் கெல்லீசிலுள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…