பஞ்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுப் பஞ்சுகளால் கோவையில் பல்வேறு சுவாசப் பிரச்சனை!

Default Image

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  கோவையில் பஞ்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுப் பஞ்சுகளால் பல்வேறு சுவாசப் பிரச்சனைகளுக்கு ஆளாவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

 

கோவை ராமநாதபுரம் பகுதியில் பனிமூட்டம் போல் திரும்பும் இடமெங்கும் பஞ்சுகளால் நிரம்பிக் கிடக்கிறது. அப்பகுதி மக்கள் தங்கள் மூக்கையும் வாயையும் மூடியபடி உலவுகின்றனர். பலர் வீட்டை விட்டே வெளியில் வராமல், கதவு, ஜன்னல்களை மூடிக்கொண்டுள்ளனர். இத்தனைக்கும் காரணம் அப்பகுதியில் இயங்கி வரும் பங்கஜா மில்ஸ் என்கிற பஞ்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுப் பஞ்சுகளே. தேசிய பஞ்சாலை கழகத்தின் கீழ் இயங்கும் இந்த பஞ்சாலையில் 500 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாகவே இரவு நேரங்களில் ஆலையில் இருந்து கழிவுப் பஞ்சுகள் வெளியேறி காற்றில் கலந்து தங்கள் இயல்பு வாழ்க்கையே முடக்கியுள்ளதாகக் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள். தரமற்ற பஞ்சுகளை பயன்படுத்துவதாலும், முறையான பராமரிப்பு இல்லாமல் போனதாலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, இவ்வாறு கழிவுப் பஞ்சுகள் வெளியேறி வருவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்