பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பெண் செய்த காரியம்-அதிர்ச்சி அளிக்கும் பின்னனி தகவல்
- கைகுழந்தை வாடகை எடுத்து பொதுமக்களிடம் தன் குழந்தைப் போல் நடித்து பிச்சை எடுத்த பெண்
- வேலூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்
வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான மரத்தான் போட்டி நடைபெற்றது இந்த போட்டியை அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.துவக்கி வைத்துவிட்டு வருகையில் சாலையின் ஒரமாக பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பரிதாபமாக பிச்சை எடுத்து கொண்டிருந்ததை பார்த்த ஆட்சியர் அப்பெண்ணின் அருகில் நேராக சென்று விசாரித்துள்ளார்.அப்பொழுது பதற்றம் அடைந்த அப்பெண் தான் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த புத்தூர் என்னுடை ஊர் அங்கிருந்து குழந்தைகளை வாடகைக்கு எடுத்து வந்து பிச்சை எடுத்து வருவதாகவும் அந்த கூறினார்.இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஆட்சியர் அதிர்ச்சியாகி கைக்குழந்தையுடன் அந்த பெண்ணை கைது செய்ய போலீசார்க்கு உத்தரவிட்டார்.
மேலும் அவர் கையில் வைத்திருந்த குழந்தையை அரியூர் பகுதியிலுள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.குழந்தைகள் எல்லாம் கடவுள்கள் அவர்களை இவ்வாறு வாடகைக்கு எடுத்து அவர்களை வெயில்,குளிர் என்று சிரமப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ,உரிய நேரத்தில் உணவு கொடுக்கப்படாத கொடுரங்களும் மனத்திற்கு வேதனையை தருகிறது.
கரங்களில் புத்தகத்தை தொட வேண்டிய காலத்தில் அடுத்தவரின் காய்ன்களை கண்கொட்டாமல் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் அதிர்ச்சியும்,இந்தியாவில் பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது இந்தியா எத்துணை வளர்ச்சியை எட்டினாலும் இந்த பிரச்சணையின் வளர்ச்சியை மட்டும் தட்டி தடுக்க தவறுகிறதா.?என்று பொதுமக்கள் பொறுமிகின்றனர்.மேலும் பிச்சை எடுக்க ஈடுபடுத்தப்படும் குழந்தைகளின் படிப்பு மற்றும் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.வேலூர் ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் தங்களது ஆதரவினை அளித்து வருகின்றனர்.