பசுமைவழி சலை விவகாரத்தில் அடக்குமுறையை கையாளுகிறதா அரசு..??யோகேந்திர யாதவ் கைது செய்து விடுதலை …!!!

Published by
kavitha

எட்டு வழிச் சாலை பிரச்னைக்காக தமிழக விவசாயிகளைக் காண வந்த யோகேந்திர யாதவை, தமிழக காவல் துறையினர் வலுக்கட்டாயமாகக்  கைது செய்து விடுவித்தனர். யார் இந்த யோகேந்திர யாதவ் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Related image

முன்னர் இருந்தே பல காலமாக மக்கள் சார்ந்த பிரச்னைகளுக்காக செயல்பட்டு வருபவர். டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் மூளையாகச் செயல்பட்டவர். அக்கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து வெளியேறி, பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோருடன் சேர்ந்து ‘சுவராஜ் அபியான்’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார். கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமூகம் சார்ந்த அரசியல் அமைப்பான ‘ஸ்வராஜ் அபியான்’ என்ற கட்சியை உருவாக்கி அதன் தலைவராக தற்போது வரை வழி நடத்திக் கொண்டிருப்பவர்.2015-ம் ஆண்டு வட இந்தியா முழுக்க வறட்சியான சூழல் நிலவியது.

அப்போது மெத்தனம்காட்டிய மத்திய அரசின் போக்கை கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தொடர்ந்தார். அதில், ‘வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் முழுமையான நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. எனவே வறட்சி பாதித்த மாநிலங்களில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, நியாயமாக வழங்க வேண்டிய அத்தியாவசிய உணவுப் பொருள்களும் முறையாக வழங்கவில்லை’ என வாதிட்டவர். அதன் பலனாக உச்ச நீதிமன்றம், இது நாடு முழுவதும் பயனளிக்ககூடிய சட்டம் என்று சொல்லி, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளை அமல்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டது.2016-ம் ஆண்டு வறட்சியின் பிடியில் இருந்த தமிழகம் முழுக்க கள ஆய்வு மேற்கொண்டவர். இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளை ஒன்றிணைக்க ‘அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு’வைக் கட்டமைத்தவர். இக்குழு அகில இந்திய அளவில் 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளை ஒருங்கிணைத்து, கடந்த நவம்பர் மாதத்தில் 50,000 விவசாயிகளை அவர்களின் உரிமைகளுக்காக, டெல்லியின் பாராளுமன்ற வீதியில் போராடச் செய்தவர். கடந்த ஆண்டு அகில இந்திய அளவில் விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பிரசாரம் செய்தவர். மதுக்கடைகள் மூடல், விவசாயிகள் பிரச்னை போன்ற பொதுநல பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தவர்.

2016-ம் ஆண்டு வறட்சியின் பிடியில் இருந்த தமிழகம் முழுக்க கள ஆய்வு மேற்கொண்டவர். இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளை ஒன்றிணைக்க ‘அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு’வைக் கட்டமைத்தவர். இக்குழு அகில இந்திய அளவில் 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளை ஒருங்கிணைத்து, கடந்த நவம்பர் மாதத்தில் 50,000 விவசாயிகளை அவர்களின் உரிமைகளுக்காக, டெல்லியின் பாராளுமன்ற வீதியில் போராடச் செய்தவர். கடந்த ஆண்டு அகில இந்திய அளவில் விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பிரசாரம் செய்தவர். மதுக்கடைகள் மூடல், விவசாயிகள் பிரச்னை போன்ற பொதுநல பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தவர். இதையடுத்து கடந்த 8-ம் தேதி  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் சென்னை – சேலம் எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க வந்திருந்தார்.

எட்டுவழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் விவசாயிகளையும் சந்திக்கச் சென்றார். விவசாயிகளை சந்திக்கும் பயணத்தைத் துவங்கியவுடன்  சி.நம்மியந்தல் பகுதியில் வைத்து அவரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்த செங்கம் காவல்துறை ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தது. பல மணி நேர காத்திருப்புக்குப் பின்னர், காவல்துறை அவரைத் தடுத்த காரணத்தைத் தெரிவித்தது. அதன் பின்னர் சனிக்கிழமை இரவு விடுவிக்கப்பட்ட அவர், நேற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்துப் பேசினார். இவரது கைது நடவடிக்கைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
kavitha

Recent Posts

கங்குவா விமர்சனம் : பாசிட்டிவும், நெகட்டிவும் ரசிகர்கள் கூறுவது என்ன?

சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…

7 hours ago

AUS vs PAK : பொளந்து கட்டிய மேக்ஸ்வெல்! 29 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…

8 hours ago

பெய்ரூட் மீது வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மக்கள் வெளியேற வலியுறுத்தல்!

பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…

8 hours ago

தூத்துக்குடி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கனிமொழி! உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!

தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…

8 hours ago

சென்னையில் நேர்ந்த சோகம்! காற்றில் பறந்த எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழப்பு!

சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…

10 hours ago

லீக்கான அந்த மாதிரி வீடியோ? சமூக வலைத்தளங்களிருந்து விலகிய பாகிஸ்தான் டிக்டாக் பிரபலம்!

பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…

10 hours ago