நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை!
நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
சேலம் பழைய பேருந்துநிலையம், 5 ரோடு, சூரமங்கலம், ஜங்ஷன், கோரிமேடு, அஸ்தம்பட்டி, சிலநாயக்கன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த காற்று மற்றும் கனமழையால் நகரின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம், அண்ணாமலை நகர், மாரியப்பநகர், புவனகிரி, சேத்திய தோப்பு பகுதிகளில் பலத்த காற்று இடியுடன் கனமழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ஆவட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் திடீர் மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, ஏலவனாசூர்கோட்டை, செங்குறிச்சி. சேந்தநாடு, கிளியூர், பிள்ளையார்குப்பம், களமருதூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பெய்தது. ஊளுந்தூர்பேட்டை – சேலம் மற்றும் சென்னை – திருச்சி நான்கு வழிச்சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தஞ்சை, திருவையாறு, கண்டியூர், திருப்பூந்துருத்தி, உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், நீடாமங்கலம், குடவாசல், கொரடாச்சேரி, திருவாரூர், விளமல் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.