சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் “சூரியன் மறைவதில்லை” புத்தகத்தை சோனியாகாந்தி வெளியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் ‘சூரியன் மறைவதில்லை’ என்ற புத்தகத்தை வெளியிட்டார் சோனியா காந்தி.இந்த விழாவில் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகிய முதல்வர்கள் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் துறைமுருகன் கருணாநிதி இல்லை என்ற ஏக்கத்தை போக்கும் வகையில் கட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார் ஸ்டாலின் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
கருணாநிதியின் சிலையை சோனியாகாந்தி திறந்து வைத்தது திமுகவினருக்கு பெருமை மேலும் எதிரிகள் வகுக்கும் திட்டங்களை வீழ்த்தி தன்னிகரில்லா தலைவராக திகழ்பவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் .
தேசிய தலைவர்கள் சென்னை வந்து சென்றால் அவர்களுக்கு புதிய பதவிகள் தேடிவரும் என்று பேசிய அவர் அடுத்த பிரதமராக வர ராகுல்காந்தி தகுதி படைத்தவர்,பிரதமர் மோடிக்கு சவாலாக இருக்கிறார் ராகுல்காந்தி, மத்தியில் ஒரு மாற்றம் கொண்டுவருவோம். கருணாநிதியை கவுரவிக்கும் எண்ணம் தற்போதைய தமிழக அரசுக்கு இல்லை. என்று சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துரைமுருகன்உரையாற்றினார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…