நேரம் பிந்தி வந்தேம்மா, தவறாக நினைக்காதீங்க!வருந்திய விஜய்

Published by
Venu

நேற்று நள்ளிரவில் நடிகர் விஜய் அறிவிக்காமலேயே தூத்துக்குடி சென்றுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நடிகர் விஜய் நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் ஸ்லோனின் ஜான்சி உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்ற விஜய் ஆறுதல் தெரிவித்து மட்டுமல்லாமல் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினார். பலியானோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

இதனிடையே இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறும்போது, “ மகளை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டு வெளியே உட்கார்ந்திருந்தோம். அந்த நேரத்தில் இரண்டு பைக் வந்தது. யாரென்று தெரியவில்லையே என பார்த்தோம். உடனே கையெடுத்து கும்பிட்டப்படி விஜய் வீட்டுக்குள் வந்தார். எங்களுடன் அமர்ந்து எங்களுடைய அனுதாபத்திலும், சோகத்திலும் பங்கெடுத்துக் கொண்டார். ‘நேரம் பிந்தி வந்தேம்மா’ அதற்காக தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் என்றார். மேலும் இரவு நேரத்தில் வந்ததற்காக எங்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். புகைப்படம் கூட எடுக்க வேண்டாம் என்று மிகவும் எளிமையாக நடந்து கொண்டார். எங்கள் வேதனையில் மகனைப் போல பங்கெடுத்துக் கொண்டார்” என தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

“அந்த விஷயத்துக்கு காசு கூட வாங்கல”…தனுஷ் – நயன்தாராவுக்கும் இப்படி ஒரு நட்பா?

சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…

29 mins ago

உ.பி. தீ விபத்து : உயிரிழந்த 10 குழந்தைகளுக்கு நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி, முதல்வர் யோகி!

ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…

1 hour ago

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ளீர்களா ? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…

1 hour ago

தமிழகத்தில் திங்கள் கிழமை (18/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…

2 hours ago

தனுஷுக்கு எகிறும் எதிர்ப்பு? ‘லைக்’கால் நயன்தாராவுக்குக் குவியும் ஆதரவு!

சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…

2 hours ago

“வாழு வாழ விடு” …தனுஷுக்கு அட்வைஸ் செய்த நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன்!

சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…

2 hours ago