நேரத்தை வீணாடிக்கும் வழக்குகளுக்கு அபராதம்..!உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!!
இனி உள்நோக்கத்தொடு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க கூடிய வகையில் அடுத்தடுத்து தொடரப்படும் பொது நல வழக்குகளை தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருக்கின்ற ஐயப்பா பிரார்தனா மந்திர் சமிதி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டவிரோதமாக கட்டப்படுகின்ற கோவிலை இடிக்க கோரி சென்னை எழும்பூர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் அவர்கள் ஏற்கனவே இந்த கோவிலின் கட்டுமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவித்த அரசு தரப்பு இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனால் அதிருப்தியான நீதிபதிகள் உள்நோக்கத்தோடு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க கூடிய வகையில் அடித்தடுத்த பொது நல வழக்குகளை தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.