சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வைத்த கோரிக்கையில் கூறியதாவது, நாடாளுமன்ற அவைகளின் நிகழ்வுகளையும், ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களின் சட்டமன்ற நிகழ்வுகளையும், நேரடி ஒளிபரப்பு செய்வது போன்று, தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகள், விவாதங்கள் போன்றவை பொதுமக்களுக்கு தெரியவரும் அதேவேளை, சட்டமன்ற உறுப்பினர்கள் தத்தம் தொகுதிகளின் பேரவைச் செயல்பாடுகளையும் மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்பது மட்டுமல்லாமல் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்தும் அறிந்துகொள்ளவும், தங்கள் ஜனநாயக கடமையை புரிந்துக் கொள்ளவும் முடியும். எனவே பேரவை நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்புக் குறித்து உடனடியாகப் பரிசீலித்து நடைமுறைப்படுத்த தமிழக அரசை சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்வதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…
சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…