நேபாளத்தின் சிமிகோட்டில் சிக்கி தவிக்கும் சென்னையை சேர்ந்த 19 பக்தர்கள் பத்திரமாக மீட்கப்படுவர்!அமைச்சர் ஜெயக்குமார்
கைலாஷ் யாத்திரைக்காக சென்று மோசமான வானிலை காரணமாக விமான சேவை இல்லாமல் நேபாளத்தின் சிமிகோட்டில் சிக்கி தவிக்கும் சென்னையை சேர்ந்த 19 பக்தர்கள் பத்திரமாக மீட்கப்படுவர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து தனியார் டிராவல்ஸ் மூலம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற சென்னை பக்தர்கள் 19 பேர் சிக்கித்தவித்து வருகின்றனர்.மோசமான வானிலை காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் யாத்ரீகர்கள் தவித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து யாத்திரை சென்ற 1,000க்கும் மேற்பட்டோர் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.