நெல் ஜெயராமனின் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி…!!
நெல் ஜெயராமனின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். சென்னை தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டிருக்கும் நெல் ஜெயராமனின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் மற்றும் காமராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், நெல் ஜெயராமன் மீட்டெடுத்த பாரம்பரிய நெல் வகைகளை அரசு அங்கீகரித்து இருப்பதாகவும் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.
DINASUVADU.COM