நெல்லை விரைவு ரயிலின் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகளை அனுமதிக்காமல் பூட்டி வைத்ததால் ரயிலை மறித்து போராட்டம்..!
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நெல்லை விரைவு ரயிலின் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகளை அனுமதிக்காமல் பூட்டி வைத்ததால் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.
தினமும் இரவு 7.50 மணிக்கு நெல்லை விரைவு ரயில் சென்னைக்கு புறப்படுகிறது. முன்பதிவில்லா பெட்டியில் ஏறுவதற்காக பிற்பகல் முதலே ஏராமானோர் ரயில் நிலையத்தில் காத்திருந்த நிலையில், என்ஜின் அருகே உள்ள இரு முன்பதிவில்லா பெட்டிகளும், பூட்டி வைக்கப்பட்டிருந்தன. ரயில்வே தொழிற்சங்கத்தினர் பெட்டியை முன்பதிவு செய்திருப்பதாக காரணம் கூறப்பட்டது.
இதனை ஏற்றுக் கொள்ளாத பயணிகள் ரயில் மறியலில் ஈடுபடத் தொடங்கினர். ரயில்வே போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து முன்பதிவில்லா பெட்டிகள் திறந்துவிடப்பட்டன.