நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் தீ விபத்து..!
நெல்லை மாவட்டத்தில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. பள்ளியின் ஸ்டோர் ரூமில் இருந்து மின் கசிவு காரணமாக திடீரென கரும்புகை வரத் தொடங்கியதையடுத்து அந்த ஸ்டோர் ரூமை ஒட்டியுள்ள மாணவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். ஸ்டோர் ரூமில் ஏற்பட்ட தீ வகுப்பறைக்கு பரவத்தொடங்கியது.
தனை அறிந்த தீ அணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வீரர்கள் மிகுந்த போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தனர்.
இதனிடையே தீயணைப்பு உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததால், தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.