8 வயது சிறுமியை,சகோதரனான 14 வயது சிறுவன் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அடித்துக் கொலை செய்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன்கோவிலை அடுத்த கிழக்குஅழகுநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் சின்னராமசாமி. அவரது 14 வயதான மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. சின்னராமசாமி வெளியூரில் வேலைபார்த்து வருவதால் அவரது மகனும் மகளும் பாட்டி வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று சிறுவனை அவரது பாட்டி ஞானபிரகாசம் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், களைகொத்தியால் பாட்டியையும் சகோதரியையும் சரமாரியாக தாக்கியுள்ளான். இதில் படுகாயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மூதாட்டி ஞானபிரகாசத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…