ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பியார் கோவிலுக்கு ஆற்றைக் கடந்து சென்ற பக்தர்கள், மறுகரைக்கு மீண்டும் திரும்ப முடியாமல் தவித்தனர்.
புகழ்பெற்ற திருக்குறுங்குடி அழகிய நம்பியார் கோவிலுக்கு சனிக்கிழமைதோறும் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். நம்பியாற்றைக் கடந்துதான் இக்கோவிலுக்குச் செல்ல முடியும்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக நம்பியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோவிலுக்குச் சென்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள், மீண்டும் மறுகரைக்குத் திரும்ப முடியாமல் தவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், பக்தர்களை பத்திரமாக மீட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…