நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயில் குடமுழுக்கு விழா நடத்தும் மரபு குறித்து, பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், செய்தியாளர் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கோயில் இணை ஆணையர் திணறினார்.
வரும் 27-ஆம் தேதி நெல்லையப்பர் கோவிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவிற்கு நேரம் குறிக்கப்பட்டது. பணிகள் நிறைவடையாதது மற்றும் ஆகம விதிகள் மீறல் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து விளக்கமளிக்க நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற கோயில் செயல் அலுவலர் ரோஷினி கேள்விகளை எதிர்கொள்ள இயலாமல், இணை ஆணையர் பரஞ்ஜோதியை வரவழைத்தார். கோயில் கொடிமரத்தில் தங்கம் சுரண்டப்பட்டிருப்பது உள்ளிட்ட சர்ச்சைகள் குறித்து கேட்டபோது, பரஞ்ஜோதி கடைசிவரை பதிலளிக்க மறுத்துவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,