நெருங்கும் சூரசம்ஹாரம்…கந்த சஷ்டி நாளான நேற்று ஜெயந்திரநாதர் எழுந்தருளினார்..!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 4 நாளான நேற்று கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் கடவுள் முருகபெருமானின் அறுபடைவீடுகளில் 2-ம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் அதிகாலையில் யாகசாலை பூஜையுடன் சிறப்பாக தொடங்கியது.
2-ம் திருநாளில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.இது அங்கு சிறப்பாக நடைபெறும்
இதன் பின்னர் உச்சவ சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் யாகசாலையில் எழுந்தருளிய பின் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது.இதனை தொடர்ந்து யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான 6-ம் நாள் வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறது.இந்த நாளில் மாலை 4.30 மணிக்கு விழாவின் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. இதைக்காண திரளாணபக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாளை முருகபக்தர்கள் எதிர்நோக்கும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU