ரேஷன் கார்டுதாரர்கள் நெரிசல் இன்றி, பொங்கல் பரிசு தொகுப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், ஞானசேகரன், மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது தொடர்பான அவர் சுற்றறிக்கையில் ‘ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தேவையான பொருட்களை, தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்றும் மண்டல இணை பதிவாளர்கள், தங்கள் மண்டலத்தில் தகுதியுள்ள, ரேஷன் கார்டுதாரர்களின் பட்டியலை, மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் இருந்து பெற்று, பச்சரிசி, சர்க்கரையை, நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருந்து, நகர்வு செய்து கொள்ள வேண்டும்.கூட்டுறவு சங்கங்கள், பொங்கல் பரிசுக்கு செலவிடப்பட்ட தொகையை, உரிய ரசீதுகளுடன், வாணிப கழகத்திற்கு அனுப்பி பெற்றுக் கொள்ள வேண்டும்.முதல்வர், பொங்கல் பரிசு வினியோகத்தை துவக்கி வைத்த, மறு தினமே, அனைத்து ரேஷன் கடைகளிலும், அவற்றை வினியோகம் செய்ய வேண்டும்.
ரேஷன் கார்டுதாரர்கள் நெரிசல் இன்றி, முறையாக பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று செல்லும் வகையில், 500 ரேஷன் கார்டுகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளில், ஊழியர்கள் சுழற்சி முறையில், தெருக்கள் அல்லது பகுதி வாரியாக வழங்க வேண்டும்.’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெர்த் : ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளிடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி…
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…