நெய்வேலியில் இருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் என்.எல்.சி.யை முற்றுகையிட திட்டமிட்டுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், தண்ணீர் தரமறுக்கும் கர்நாடகத்திற்கு மின்சாரம் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு, காவிரி மீட்புக் குழு மற்றும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் என்எல்சி முற்றுகைப் போராட்டம் அறிவித்துள்ளனர். இதற்காக நெய்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து புறப்படும் பேரணியில் பழ.நெடுமாறன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பங்கேற்கின்றனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்க திரண்டுள்ளவர்கள், மத்திய அரசைக் கண்டித்தும், கர்நாடகத்திற்கு நெய்வேலியில் இருந்து மின்சாரம் தர எதிர்ப்புத் தெரிவித்தும் பதாகைகளை ஏந்தி பேரணியில் ஈடுபட்டுனர்.
போராட்டக்காரர்கள் என்எல்சியை முற்றுகையிட திட்டமிட்டிருந்தாலும், கியூபாலத்தை தாண்டி பேரணி அனுமதிக்கப்படாது என்பதால் அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டிஐஜி, எஸ்பி, ஏடிஎஸ்பி மற்றும் 8 டிஎஸ்பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் 30 பேர், சப்இன்ஸ்பெக்டர்கள் 85 பேர், 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…