நெடுஞ்சாலைத்துறை தனியார் ஒப்பந்தநிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரைக்கு சம்மன்..!
செய்யாதுரை, நாகராஜன், தீபக், பூமிநாதன், ஜோன்ஸ் உட்பட 15 பேருக்கு வருமானவரித்துறையினர் சம்மன்.நெடுஞ்சாலைத்துறை தனியார் ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே&கோ நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரைக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், வெளிநாட்டு முதலீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள், மூட்டை மூட்டையாக பணம் சிக்கி உள்ளது.இந்த விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு தொடர்ப்பு உள்ளது தெரியவந்தது. சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யதுரை உட்பட 15 பேரும் மாலைக்குள் விசாரணைக்கு ஆஜராக சம்மன். மேலும் இவர் மணல் குவாரி அதிபரும், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த நிறுவனம் நடத்தி வரும் சேகர் ரெட்டியுடன் இணைந்து மதுரையில் ₹200 கோடிக்கு புதிய சாலைகள் போடும் ஒப்பந்தததை எஸ்.பி.கே & கோ நிறுவனம் எடுத்தது.காலை 11 மணி வரை நிலவரப்படி எஸ்பிகே&கோ நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்டு வரும் ேசாதனையில் ₹100 ரொக்க பணம் சிக்கி உள்ளது
வருமானவரி சோதனையில் ரூ.182 கோடி ரொக்கம், 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது