நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டபோது, உரிய நேரத்தில் உதவிசெய்து உயிரைக் காப்பாற்றிய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, மின்வாரிய ஊழியர் ராமச்சந்திரன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.
கஜா புயலில் சிக்கி புதுக்கோட்டை மாவட்டம் கடும் சேதத்தை சந்தித்தது. அப்போது அங்கு மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த ராமச்சந்திரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. தகவலறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவரை அனுமதிக்க உதவி செய்தார்.
அங்கு ராமச்சந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும் அமைச்சர் பரிந்துரைத்தார். உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். இந்நிலையில், மின்வாரிய ஊழியர் ராமச்சந்திரனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது தக்க சமயத்தில் உதவி செய்த அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஊழியர் ராமச்சந்திரன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
dinasuvadu.com
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…