நீலகிரி மாவட்டத்தில் உடல்நிலை மோசமாகி சாலையில் விழுந்து கிடக்கும் யானை..!
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உடல்நிலை மோசமாகி சாலையில் விழுந்து கிடக்கும் யானைக்கு சிகிச்சை அளிக்க கேரளாவில் இருந்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டுள்ளார்.
சேரம்பாடி தேயிலை தோட்டம் பகுதியில் உடல் நலக்குறைவுடன் சுற்றித்திரிந்த ஆண் யானை, இன்று உடல்நிலை மேலும் மோசமாகி கீழே விழுந்தது. மீண்டும் எழுந்து நடக்க முடியாமல் அவதிப்படும் அந்த யானை அங்கேயே படுத்து கிடக்கிறது.
முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் பணி காலியாக உள்ளதால் யானைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, யானைக்கு சிகிச்சை அளிக்க கேரள மாநிலம் சுல்தான் பத்தேரியில் உள்ள கால்நடை மருத்துவரை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர்