நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் காரணமில்லை…மத்திய அரசு திட்டவட்டம்…!!
தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணமில்லை என மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசனை வெளியிட்டது.
இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள நிலத்தடிநீர் பாதிப்பு குறித்து மத்தியஅரசு நடத்திய ஆய்வில் தூத்துக்குடி நிலத்தடி நீர் பாதிப்புக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணமில்லை என்று அறிக்கையாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.இந்த வழக்கு விசாரணையை மீண்டும் நவம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்…
dinasuvadu.com