பாமக நிறுவனர் ராமதாஸ் ,காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக நீர்ப்பாசன வல்லுநரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் தனது அறிக்கையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தற்காலிகத் தலைவராக இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான மத்திய நீர்வளத் துறைச் செயலாளர் உபேந்திர பிரசாத் சிங்கை நியமித்திருப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையம் முறையாகச் செயல்பட மத்திய அரசு நினைத்திருந்தால் நீர்ப்பாசன வல்லுநரைத் தற்காலிகத் தலைவராக நியமித்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு மாநிலத்தின் நீர்த்தேவை குறித்தும், இடர்ப்பாட்டுக் காலத்தில் எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு தண்ணீரை வழங்கலாம் என்பது குறித்தும் நீர்ப்பாசன வல்லுநர்களால் தான் தீர்மானிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் காவிரி ஆணையத்தின் தலைவராக நீர்ப்பாசன வல்லுநரை நியமித்து அதை முழுக்க முழுக்கத் தொழில்நுட்ப அமைப்பாக மாற்ற வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.