உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி நாடு முழுவதும் இந்தாண்டு பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தது.இந்த தீர்ப்பின் எதிரொலியாக பட்டாசு விற்பனை மந்தம் என்று விற்பனையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வெடிகள் வெடிக்க உச்சநீதிமன்றம் வைத்த வெடியால் 75 விழுக்காடு வெடிகள் விற்காமல் அப்படியே தேங்கியுள்ளதாக வெடி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளியன்று குறிப்பிட்ட அந்த 2மணி நேரமே வெடிகளை வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடு விதித்தது.மேலும்அதிக மாசு வெளியிடும் மற்றும் ஒலி எழுப்பக்கூடிய வெடிகளை வெடிக்கக் கூடாது என்றுகட்டுப்பாடு விதித்தது.
இந்நிலையில் இந்த தீர்ப்பிற்கு பிறகு சென்னை தீவுத்திடல், நந்தனம், கிழக்குக் கடற்கரைச் சாலை, இராயப்பேட்டை ஆகிய இடங்களில் பட்டாசு விற்பனையகம் அமைக்கப்பட்டது ஆனால் வருடந்தோறும் பட்டாசுகள் மலமலவென விற்பனையாகக் கூடிய வெடிகள் இந்தாண்டு மட்டும் வெறும் 25விழுக்காடு அளவே வெடிகள் விற்பனையானதாகவும் 75விழுக்காடு வெடிகள் தேக்கமடைந்துள்ளதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
இதை கடந்த ஆண்டு விற்பனையான அளவை ஒப்பிடும்போது 30விழுக்காடு வெடிகளே விற்பனை ஆனதாகவும் எழுபது சதவீத விழுக்காடு வெடிகள் அப்படியே தேக்கமடைந்து உள்ளதாகவும் விருதுநகர் வணிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனால் வெடி தயாரிப்புத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் நலனைக் கருத்திற்கொண்டு வெடி வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாட்டைத் தளர்த்த வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெடிவெடித்தாக 906 வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…