நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி…!!இந்தாண்டு தீபாவளிக்கு பட்டாசு விற்பனை படு மந்தம்…!!!

Default Image

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி நாடு முழுவதும் இந்தாண்டு பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தது.இந்த தீர்ப்பின் எதிரொலியாக பட்டாசு விற்பனை மந்தம் என்று விற்பனையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Image result for firecrackers

வெடிகள் வெடிக்க உச்சநீதிமன்றம் வைத்த வெடியால் 75 விழுக்காடு வெடிகள் விற்காமல் அப்படியே தேங்கியுள்ளதாக வெடி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளியன்று குறிப்பிட்ட அந்த 2மணி நேரமே வெடிகளை வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடு விதித்தது.மேலும்அதிக மாசு வெளியிடும் மற்றும் ஒலி எழுப்பக்கூடிய வெடிகளை வெடிக்கக் கூடாது என்றுகட்டுப்பாடு விதித்தது.

Related image

இந்நிலையில் இந்த தீர்ப்பிற்கு பிறகு சென்னை தீவுத்திடல், நந்தனம், கிழக்குக் கடற்கரைச் சாலை, இராயப்பேட்டை ஆகிய இடங்களில் பட்டாசு விற்பனையகம் அமைக்கப்பட்டது ஆனால் வருடந்தோறும் பட்டாசுகள் மலமலவென விற்பனையாகக் கூடிய வெடிகள் இந்தாண்டு மட்டும் வெறும் 25விழுக்காடு அளவே வெடிகள் விற்பனையானதாகவும்  75விழுக்காடு வெடிகள் தேக்கமடைந்துள்ளதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

Image result for firecrackers

இதை கடந்த ஆண்டு விற்பனையான அளவை ஒப்பிடும்போது 30விழுக்காடு வெடிகளே விற்பனை ஆனதாகவும் எழுபது சதவீத விழுக்காடு வெடிகள் அப்படியே தேக்கமடைந்து உள்ளதாகவும் விருதுநகர் வணிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related image

 

இதனால் வெடி தயாரிப்புத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் நலனைக் கருத்திற்கொண்டு வெடி வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாட்டைத் தளர்த்த வழிவகை செய்ய வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெடிவெடித்தாக 906 வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்