மத்திய அரசுக்கு , காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை கடந்த மாதம் 16 ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், 6 வார காலத்திற்குள்ளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தியிருந்தது. ஆனால், மத்திய அரசோ மேலாண்மை வாரியத்தினை அமைப்பதில் கவனம் செலுத்துவதாக தெரியவிலை. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் 6 வார காலத்திற்குள்ளாக அமைக்கப்படாதென மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் தெரிவித்துள்ளார்.
விரைவில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினாலேயே மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசு காலம் தாழ்த்துவதாக குற்றம் சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள்.
இந்நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக பேசிய, காவிரி விவகாரத்தில் தமிழத்தின் உரிமையை மறுதலிக்கிற மத்திய அரசுக்கு எதிராக, அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் எனவும், மேலாண்மை வாரியத்தினை அமைத்திடாமல் காலம் தாழ்த்துகிற மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர் வேண்டுமெனவும் தெரிவித்து அதிரடி கிளப்பியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…
டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…