நீதிமன்ற அவமதிப்பு மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும்!

Default Image

மத்திய அரசுக்கு , காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை கடந்த மாதம் 16 ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், 6 வார காலத்திற்குள்ளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தியிருந்தது. ஆனால், மத்திய அரசோ மேலாண்மை வாரியத்தினை அமைப்பதில் கவனம் செலுத்துவதாக தெரியவிலை. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் 6 வார காலத்திற்குள்ளாக அமைக்கப்படாதென மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் தெரிவித்துள்ளார்.

விரைவில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினாலேயே மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசு காலம் தாழ்த்துவதாக குற்றம் சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள்.

இந்நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில்  எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக பேசிய, காவிரி விவகாரத்தில் தமிழத்தின் உரிமையை மறுதலிக்கிற மத்திய அரசுக்கு எதிராக, அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் எனவும், மேலாண்மை வாரியத்தினை அமைத்திடாமல் காலம் தாழ்த்துகிற மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர் வேண்டுமெனவும் தெரிவித்து அதிரடி கிளப்பியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori