நீதிபதியை மேடைக்கு மேடை விமர்சிப்பது வெட்கக்கேடு! நீதிபதி கிருபாகரன்
காவலர்களை காவல் பணிக்கு மட்டுமே பயன்படுத்துங்கள் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையினரை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
காவல் உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டால் தனியாக தேர்வு செய்து கொள்ளவும் என்று நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஆர்டர்லி முறையை விரும்பும் காவலர்களும் இருக்கத்தான் செய்கின்றனர், மற்ற காவலர்கள் போல் கஷ்டப்பட்டு பதவி உயர்வு அடைய வேண்டாம் என அவர்கள் நினைக்கிறார்கள்.குற்றவாளிகள் தாக்கப்பட்டால் மட்டும் மனித உரிமை மீறல் என கொதிப்பது ஏன்? காவல்துறையினர் தாக்கப்படும்போது மனித உரிமை ஆர்வலர்கள் கண்டுகொள்ளாதது ஏன்? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எளுப்பியுள்ளார். சாதகமான தீர்ப்பு வரவில்லை என்பதற்கான நீதிபதியை மேடைக்கு மேடை விமர்சிப்பது வெட்கக்கேடு. வழக்கறிஞர்களும், காவலர்களும் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததும் வெட்கக்கேடானது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.