கடந்த மே 6 ஆம் தேதி தமிழகத்தில் 170 மையங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர்.பின்னர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இதன் பின் கடந்த ஜூலை 10 ஆம் தேதி வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாராணைக்கு வந்தது.இந்த வழக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே. ரெங்கராஜன் எம்.பி சார்பில் வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லன்,சீனிவாசராகவன் ஆகியோர் நீட் வினாத்தாள் குளறுபடியால் 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்தார்.
பின்னர் இதை விசாரித்த நீதிமன்றம், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது . 49 வினாக்கள் நீட் தேர்வில் தவறாக கேட்கப்பட்டிருந்ததால் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டது.49வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.மேலும் தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.சி.பி.எஸ்.இ. கருணை மதிப்பெண் வழங்கி 2வாரத்தில் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டது.
கடந்த ஜூலை 16 ஆம் தேதி சிபிஎஸ்இ நீட்- கருணை மதிப்பெண் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது . தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் தர வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீட் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது .
ஏற்கனவே நீட் தேர்வு எழுதும் போதும் பல்வேறு குளறுபடியால் மாணவர்கள் அவதிப்பட்டனர்.இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தமிழக மாணவர்கள் மீண்டும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…