உயர் நீதிமன்ற மதுரைக்கிளை , நீட் தேர்வில் பிழையான ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் வழங்க சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டது.
இது தொடர்பாக வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாராணைக்கு வந்தது.இந்த வழக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே. ரெங்கராஜன் எம்.பி சார்பில் வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லன்,சீனிவாசராகவன் ஆகியோர் நீட் வினாத்தாள் குளறுபடியால் 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்தார்.
பின்னர் இதை விசாரித்த நீதிமன்றம், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது . 49 வினாக்கள் நீட் தேர்வில் தவறாக கேட்கப்பட்டிருந்ததால் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டது.49வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.மேலும் தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.சி.பி.எஸ்.இ. கருணை மதிப்பெண் வழங்கி 2வாரத்தில் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே. ரெங்கராஜன் எம்.பி கூறுகையில்,இந்த வெற்றி மாணவர்களுக்கான வெற்றி.கூடுதல் இடங்களை மருத்துவக்கல்லூரிகளில் ஏற்படுத்த வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…