நடிகர் ரஜினிகாந்த், மாணவி பிரதீபா உயிரிழந்தது குறித்து வேதனை தெரிவித்த நிலையில், நீட் தேர்வால் உயிர்ப்பலிகள் தொடர்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த்,காலா படத்திற்கு எதிர்ப்புகள் அதிகம் வரும் என்று எதிர்பார்த்ததாகவும், எதிர்பார்த்ததை விட எதிர்ப்புகள் குறைவுதான் என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியது , காவிரி விஷயத்தில் பேசி தீர்வு கண்டால் நல்லது என்றும், கர்நாடக முதலமைச்சரை கமல் சந்தித்ததில் தவறில்லை என்றும் தெரிவித்தார்.
காலா படம் வெளியீடு குறித்து கர்நாடக அரசு ஏற்பாடு செய்யும் என நம்புவதாகத் தெரிவித்த ரஜினிகாந்த், படத்தை தடைசெய்ய தேவகவுடா விடமாட்டார் என்று குறிப்பிட்டார்.
அரசியலையும் தொழிலையும் ஒன்றுபடுத்தி பார்ப்பது சரியல்ல என்றும் ஆனால் இங்கே இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிறார்கள் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…