நீட் தேர்வு வேண்டாம்; ஆனாலும் நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி
நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை, ஆனாலும் நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்தமுறை 1100க்கும் மேல் மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வு தோல்வியடைந்ததால் அரியலூர் அனிதா என்ற ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவி உயிரிழந்தார்.இதனால் தமிழகத்தில் நீட் தேர்விற்கு தடை கோரி தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். எனினும் தமிழகம் முழுவதும் நீட் தேர்வு மத்திய அரசால் நடத்தப்பட்டதும்,மாநில அரசும் அதனை எதிர்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.