உயர்நீதிமன்றம்,நீட் தேர்வுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சிபிஎஸ்இ மற்றும் தமிழக அரசு நாளைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணபித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை ஒதுக்காமல், கேரளாவில் ஒதுக்கப்பட்டிருப்பதாக முறையிடப்பட்டது. தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலம் செய்யப்பட்டுள்ளதால் மாற்ற முடியாது என சிபிஎஸ்இ அறிவித்திருந்ததும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
நீட் தேர்வு எழுதும் 17 வயதே நிறைந்த மாணவர்கள் அண்டை மாநில தேர்வு மையங்களுக்கு தேர்வு எழுத செல்வதில் சிரமம் உருவாகும் என்பதால், தேர்வு மையங்களை தமிழகத்திற்குள் மறு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், தண்டபாணி அமர்வு, சிபிஎஸ்இ மற்றும் தமிழக அரசு நாளைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.