தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணபித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை ஒதுக்காமல், கேரளாவில் ஒதுக்கப்பட்டிருப்பதாக முறையிடப்பட்டது. தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலம் செய்யப்பட்டுள்ளதால் மாற்ற முடியாது என சிபிஎஸ்இ அறிவித்திருந்ததும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
நீட் தேர்வு எழுதும் 17 வயதே நிறைந்த மாணவர்கள் அண்டை மாநில தேர்வு மையங்களுக்கு தேர்வு எழுத செல்வதில் சிரமம் உருவாகும் என்பதால், தேர்வு மையங்களை தமிழகத்திற்குள் மறு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், தண்டபாணி அமர்வு, சிபிஎஸ்இ மற்றும் தமிழக அரசு இன்று பதிலளிக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்து சிபிஎஸ்இ பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இந்த உத்தரவை பொது அறிவிப்பாக சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…