நேற்று இரவு திருச்சி அருகே, நீட் தேர்வில் தோல்வியடைந்த சுபஸ்ரீ என்ற மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி அருகே உள்ள நெ.1 டோல்கேட் உத்தமர்கோவில் திருவள்ளூவர் அவென்யூ பகுதியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் வி. கண்ணன். இவருடைய மகள் சுபஸ்ரீ (17). துறையூர் சௌடாம்பிகா பள்ளியில் பிளஸ் 2 படித்த சுபஸ்ரீ 907 மதிப்பெண் எடுத்திருந்தார். இதையடுத்து மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுந்தியிருந்தார். இந்நிலையில் அண்மையில் வெளியிடப்பட்ட நீட் தேர்வு முடிவில் சுபஸ்ரீ 24 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்தாராம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறியிருந்தனர். இருந்தாலும் சுபஸ்ரீ தொடர்ந்து மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில்,நேற்று மாலை குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றனர். பிறகு இரவு வீடு திரும்பினர். இதையடுத்து 10.30 மணியளவில் கண்ணன் வீட்டின் வெளிக் கதவை அடைத்துவிட்டு வரச் சென்றார். அந்த நேரத்தில் படுக்கை அறைக்கு சென்ற சுபஸ்ரீ கதவை தாழிட்டுள்ளார். சப்தம் கேட்டு வந்த பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். வெகுநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் பின்புறமாகச் சென்று ஜன்னல் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அங்கு சுபஸ்ரீ தூக்கில் தொங்கியுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அறைக் கதவை உடைத்து சுபஸ்ரீயை பால்பண்ணை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சுபஸ்ரீ உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்த நெ.1 டோல்கேட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…