நீங்க ஆர்டர் மட்டும் பண்ணுங்க வீட்டு வாசலுக்கே வந்துசேரும் சேலத்து மாம்பழங்கள்!

Default Image

மாம்பழ வியாபாரம் கோடை சீசனில் களைகட்டியிருக்க, மாம்பழங்களுக்கு புகழ்பெற்ற சேலத்தில், காலமாற்றத்துக்கு ஏற்ப ஆன்லைன் விற்பனைக்கு மாறியுள்ளனர் வணிகர்கள்.

பண்ருட்டி பலா, சிறுமலை வாழை என புகழ்பெற்ற வட்டார கனிகளின் வரிசையில் சுவையான மாம்பழம் என்றாலே சேலம்தான். முக்கனிகளில் முதன்மையாக ருசிக்கப்படும் மாம்பழங்கள், சேலம் மாவட்டத்தில் அதிக அளவில் விளைகின்றன. பெங்களூரா, மல்கோவா, செந்தூரா, இமாம்பசந்த் என்ற பெயர்களில் விளையும் சுவையான மாம்பழங்களுக்கு, சந்தையில் நிலையான மவுசு உள்ளது. சேலம் மாம்பழங்கள், தமிழகம் மட்டுமின்றி, லாரிகளில் வெளிமாநிலங்களுக்கும், கப்பல்களில் கடல் கடந்து வெளிநாடுகளுக்கும் பயணித்து மக்களுக்கு சுவை விருந்து படைக்கின்றன.

சேலம் மாவட்டத்தில் மாந்தோப்புகளில் நேரடியாக மாம்பழங்களை பறிக்கும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. கடைகளில் மாம்பழங்களை வாங்கி ருசிக்கும் மாம்பழ பிரியர்களுக்கு, தற்போது சுவையான தகவல் ஒன்று உள்ளது. இருந்த இடத்திலிருந்தே ஆன்லைனில் மாம்பழங்களை ஆர்டர் செய்து வாங்கும் வசதியை சேலம் மாம்பழ வணிகர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளனர். பிடித்தமான மா வகைகளை ஆன்லைனிலேயே தேர்வு செய்து ஆர்டர் செய்தால், வீட்டுக்கே ஆன்லைன் மாம்பழ வணிகர்கள் கொண்டு வந்து தருகிறார்கள்.

மாம்பழ வகைகள், தரம் மற்றும் விலைகளை தினமும் மாற்றி அமைக்கும் வர்த்தகர்கள், பழங்களை எளிய முறையில் வாங்கவும் வழிமுறைகளை குறிப்பிடுகின்றனர். உழவனுக்கு உரியது கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு கொண்டுவரப்பட்டுள்ள ஆன்லைன் விற்பனை கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்