நீங்கள் யார்?ரஜினியிடம் கேள்வி கேட்க எனக்கு உரிமை உள்ளது!சந்தோஷ் விளக்கம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் 100 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க வராதது ஏன்..? என்ற தொனியிலே ’நீங்கள் யார்? என கேட்டேன் என்று துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சந்தோஷ் தெரிவித்துள்ளார்.மேலும் நான் ரஜினியிடம் கேட்ட கேள்வியின் நோக்கம் வேறு. உரிமையுடன் ரஜினியிடம் கேள்வி கேட்டேன் என்றும் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று முன்தினம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர் (சந்தோஷ் ), “நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?” என ரஜினியைப் பார்த்துக் கேட்டார். இதையடுத்து இறுக்கமான முகத்துடன் நடிகர் ரஜினி, அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
சென்னையிலிருந்து இங்கே வர 100 நாட்கள் ஆச்சா என அந்த இளைஞர் கேள்வி எழுப்ப ரஜினிகாந்த் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.