நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் : எஸ்.பி.வேலுமணி..!
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் மூலம், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ், 11 நகரங்கள் தெரிவான நிலையில், சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 6 நகரங்களில், மேம்பாலங்கள் அமைப்பது, சாலைகள் போடுவது உள்ளிட்ட சீர்மிகு நகர திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, சென்னை சிந்தாரிப்பேட்டையில் உள்ள குடிநீர் வழங்கல் வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்மார்ட் சிட்டி பட்டியலில், திண்டுக்கல் நகரத்தையும் சேர்க்க, மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டில், மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் மூலம், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.