நிர்மலா தேவி விவகாரம்: ஏப்ரல் 30-க்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வது கடினம்!விசாரணை அதிகாரி சந்தானம்
விசாரணை அதிகாரி சந்தானம்,நிர்மலா விவாரம் தொடர்பாக பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளார். நிர்மலா தேவி விவகாரத்தில் ஏப்ரல் 30-க்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வது கடினம் என்று அவர் கூறியுள்ளார்.அதனால் நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க ஆளுநரிடம் கால அவகாசம் கோரப்படும் என்று சந்தானம் கூறியுள்ளார்.
இதற்கு முன் கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் செல்ல வற்புறுத்தியதாகக் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, 5 நாட்கள் சிபிசிஐடி விசாரணை முடிந்து நேற்று சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்காக நிர்மலா தேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி கோராததால் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மே 9ஆம் தேதி வரை நிர்மலா தேவியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிர்மலா தேவியிடம் ஆளுநர் பன்வாரிலால் அமைத்த ஒரு நபர் விசாரணைக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் இன்று விசாரணை நடத்தினார். மதுரை மத்திய சிறைக்கே நேரில் சென்ற சந்தானம் அங்கு நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினார். சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மதியம் 3 மணிக்கு விசாரணைக்கு தொடங்கும் என சந்தானம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நிர்மலா தேவி விவகாரத்தில் தொடர்புடைய பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும் விசாரணை நடத்த சந்தானம் திட்டமிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.