தேமுதிக தலைவர் விஜயகாந்த் ,பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் பின்னணியில் உள்ள “பசுத்தோல் போர்த்திய புலிகள்” யார், யார் என்பதை கண்டறிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள் முதல் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் வரை சரியாக வழிநடத்த வேண்டிய ஆசிரியர்கள் இதுபோன்ற தவறான பாதைக்கு மாணவிகளை அழைத்துச் செல்வது “வேலியே பயிரை மேய்வது” போன்று உள்ளது என தெரிவித்துள்ளார்.
ஒரு பேராசிரியர் இவ்வளவு தைரியமாக செயல்பட்டிருக்கின்றார் என்றால் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் இதன் பின்னனியில் நிச்சயம் இருக்கின்றார்கள் என்பது சந்தேகிக்கத் தோன்றுகிறது என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதனால் அவரின் பின்னணியில் உள்ள “பசுத்தோல் போர்த்திய புலிகள்” யார், யார் என்பதை கண்டறிய, நீதிமன்றமே தானாக முன்வந்து தனது நேரடி கண்காணிப்பில் விசாரணை குழு அமைக்க வேண்டும் எனவும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…