அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக நிர்மலா தேவி கூறினார். அதன் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கருப்பசாமி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த சம்பவத்தில் எனக்கு தொடர்பு இல்லை, விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாரருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து தகவல் தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என்றனர். அதனை நீதிபதி ஏற்றுக்கொண்டு கருப்பசாமி ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…