நிர்மலாதேவிக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் ..!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவிக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட நிர்மலாதேவிக்கு இதுவரை நான்கு முறை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றக் காவல் முடிவடைந்ததை அடுத்து 5 ஆவது முறையாக விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்பட்டார். அவருடைய நீதிமன்றக் காவலை அடுத்த மாதம் 5 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி திலகேஸ்வரி உத்தரவிட்டார். இதையடுத்து, நிர்மலாதேவி மீண்டும் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.