நியாய விலைக்கடை மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், நியாய விலைக்கடையில் முறையாக பொருட்கள் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நெசவாளர் காலனியில் உள்ள நியாயவிலைக் கடை முன்பு திரண்டு அவர்கள் போராட்டம் நடத்தினர். கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை என்றும், எடைக்குறைவாக உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.